இன்னும் தேடுகிறேன்
இன்னும் தேடுகிறேன்
உன்னை தேடினேன், பனியாய் குளிர்ந்தாய்
உன்னை தேடினேன், காற்றாய் காதில் வந்து பேசினாய்
உன்னை தேடினேன், அனலாய் எரித்தாய்
உன்னை தேடினேன், மழைத் துளியாய் தொட்டுச் சென்றாய்
உன்னிடம் பேச நினைத்தேன்
கடிதம் அனுப்பட்டுமா என்று எண்ணினேன்
காகிதத்தை எழுதுகோல் முட்டிக்கொண்டு நின்றது
வார்த்தைகள் என்னை ஏமாற்றியது
உன்னை பார்க்க ஏங்கினேன்
உன் முகம் பாராமல் வாடினேன்
நினைவுக்குள் எங்கோ மறைந்திருக்கும் என்று யோசித்தேன்
நினைவும் என்னை ஏமாற்றியது
எழுதுகொலின் நுனியில் துடிக்கிறாயா வார்த்தையே?
சிந்தனையின் எல்லையில் தவிக்கிறாயா சித்திரமே?
இது நிஜமா அல்லது கண் திறந்த கனவா?
நினைவினில் வசிக்கிராயா? நினைவே நீயாகிவிட்டாயா?
கேள்விகளுக்கு பதில் தேடினேன்,
விடையாய் நீயே என் கண்முன் வந்து தோன்றுவாயா?
For all those people who can understand tamil but cannot read tamil font,
here is the "tamil-in-english" version of it
Innum thedugiren
unnai thedinen, paniyaai kulirnthai
unnai thedinen, kattraai kathil vanthu pesinai
unnai thedinen, analaai erithai
unnai thedinen, mazhai thuliyaai thottuch chendrai
unnidam pesa ninaithen
kaditham anupattuma endru enninen?
kagithathai ezhudhukol muttikondu nindrathu
vaarthigal ennai ematriyadhu
unnai paarka enginen
un mugam kanamal vaadinen
ninaivukkul engo maraindhuirukkum endru yosithen
ninaivum ennai ematriyadhu
ezhudhukolin nuniyil thudikkiraaya vaarthaiye?
sindhanayin ellayil thavikiraaya chitirame?
idhu nijama alladhu kan-thirandha kanava?
ninaivinil vasikiraya ? ninave neeyagivittaya?
kelvigalukku badhil thedinen,
vidaiyaai neeye en kanmun vandhu thondruvaaya?
P.S :English translation will come out shortly(After my exams!)
The English translation: Written by Raghu(a poet whose words I literally bow to!)
You, I seek, as ever
the fine mist of your memory cools me
You, I sought
your words come to me on the wind
You, I sought
and am consumed, as if by fire
You, I sought
you, who touched me like a raindrop..
To you, I wished to speak,
countless are the letters I wish to write
yet my pen is an insuperable foe to paper
and words turn into smoke and mirrors...
You, I yearned to see,
missing the light of your face , I wilted
perhaps you hid somewhere in my thoughts,
but even thoughts play magical tricks upon me....
dear word, is it you,
twitching at the edge of my pen?
dear thought, is it you,
lingering on despite all my musings?
reality, is this you?
or do i dream, with my eyes wide open?
or have you become thought itself?